அப்படி அவகிட்ட என்னதா இருக்குது: கொந்தளிக்கும் லட்சுமிமேனன்

தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வரும் முக்கால்வாசி நடிகைகள் கேரள குட்டிகளாக தான் இருக்கிறார்கள். அப்படி நடிக்க வந்த நடிகைகளில் லட்சுமிமேனனும், நஸ்ரியாவும். இதில் நஸ்ரியா தொப்புள் விவகாரத்தில் சற்குணத்துடன் சண்டை போட்டதால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள். இருந்தாலும் அதை மறந்துவிட்டு இப்போதும் நஸ்ரியா வீட்டின் முன் கால்ஷீட்டிற்காக க்யூவில் நிற்கிறார்கள்.

தனக்கு பிறகு கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியாவிற்கு இவ்வளவு மவுசு இருக்கே என்று ஜீரணிக்க முடியாமல் கொந்தளிக்கிறாராம் லட்சுமிமேனன். கவர்ச்சிக்கு இடம் இல்லை, முத்த காட்சிக்கு நோ என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டாலும் நஸ்ரியா காட்டில் எப்படி பண மழை பொழிகிறது என்பதை தெரிந்து கொள்ள தன்னிடம் வேலை செய்பவர்களிடம் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளாராம் லட்சுமி மேனன்.

Share |
Previous Page Next Page HOME