புத்தாண்டு தினத்தில் கோடிகளை குவிக்கும் நடிகைகள்

மும்பை போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் பாலிவுட் நடிகைகளை குத்தாட்டம் ஆடவைத்து கொண்டாடுவதை அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.

ஆனால் இந்த கலாச்சாரம் தற்போது சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற தென்மாநில நகரங்களிலும் பரவியுள்ளது. சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வரும் புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள் இரவில் கிளாமரான உடையணிந்து குத்தாட்டம் ஆட கோலிவுட் நடிகைகளை புக் செய்யும் முயற்சியில் ஓட்டல் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ப்ரியங்காசோப்ரா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுவதற்கு ரூ.6 கோடி வரை சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. வர்ச்சி நடிகை சார்மி, ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடனம் ஆட ரூ.18 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு, பெங்களூர் நட்சத்திர ஓட்டைல் ரூ.7 லட்சத்திற்கு நடனம் ஆடுகிறார். மேலும், தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, ப்ரியாமணி, த்ரிஷா, நயன் தாரா ஆகிய நடிகைகளிடம் நட்சத்திர ஓட்டல் மானேஜர்கள் நடனம் ஆட வருமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நயன் தாராவும், அனுஷ்காவும் ரூ.3 கோடி வரை நடனம் ஆட சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. தமன்னா 1.5 கோடிக்கு பெங்களூர் ஓட்டல் ஒன்றில் நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளார். காஜல் அகர்வால் சென்னையிலும், ப்ரியாமணி பெங்களூரிலும், ஹன்சிகா, அனுஷ்கா ஆகியோர் ஐதராபாத்திலும் நடனம் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME