அனுஷ்காவின் டென்ஷனை குறைத்த ஆர்யா

இன்னும் மூன்றுமாதத்தில் வருமானவரி கணக்கை எப்படி சமர்ப்பிக்கப் போகிறேன் என டென்ஷனில் இருந்தார் அனுஷ்கா, இப்போது ரிலாக்ஸாகி விட்டார். காரணம் அனுஷ்காவுக்கு இப்போது புதிய ஆடிட்டர் வந்துவிட்டதால் அவரிடம் தனது கணக்குகளை ஒப்படைத்ததோடு சென்னை, ஹைதராபாத், விசாகபட்டணத்தில் தான் வாங்கியுள்ள சொத்துக்களின் விபரங்களையும் கவனித்துக்கொள்ளச் சொல்லியுள்ளார்.

இவர் வேறு யாருமல்ல.. உலகநாயகன் கமலின் வரவு செலவு கணக்குகளையெல்லாம் பல வருடங்களாக வெற்றிகரமாக நிர்வகித்து வருபவர் தான். அதன்பிறகு பிரபுதேவாவின் ஆடிட்டராகவும் மாறினார். ஒரு சமயத்தில் பிரபுதேவாவும் நயன்தாராவும் நெருக்கமான நட்பில் இருந்தபோது பிரபுதேவா மூலம் நயன்தாராவின் வரவு செலவுகளையும் பார்க்கும் ஆடிட்டராக மாறினார் சண்முகம்.

இப்போது அவருக்கு கிடைத்துள்ளது அனுஷ்காவின் ஆடிட்டர் போஸ்ட்டிங். அனுஷ்காவுக்கு இவரை யார் சிபாரிசு செய்தது என்கிறீர்களா? இரண்டாம் உலகத்தில் அவருடன் ஜோடியாக நடித்த ஆர்யாதான். ஆர்யாவுக்கு எப்படி இவரைத் தெரியும் என்றெல்லாம் கேட்காதீர்கள்.. நயன்தாராவுக்கு ஆர்யா ஃப்ரண்ட் என்பதுதான் உலகம் அறிந்த செய்தியாயிற்றே.

Share |
Previous Page Next Page HOME