சிம்பு செம டீஸன்ட்: சார்மி

சார்மியின் பாராட்டு மழையில் நனைந்து வெட்கப்பட்டு சிரித்துள்ளார் சிம்பு. தமிழ் சினிமாவில் சிம்புவின் முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் சார்மி.

இதனைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு போன்ற படங்களில் நடித்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் அமையவில்லை.

இதனைத் தொடர்ந்து அறிமுகமான தெலுங்கு உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவரை தற்போது தெலுங்கு பட சேனல்களில் பாடல்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிறைய நட்புக்காக நடனம் ஆடி இருக்கேன். எனக்கு ஒரு பாட்டுக்கு ஆடுவதில் தயக்கம் இல்லை. நாம ரீச் ஆகணும். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும் சிம்புவின் முதல் நாயகி நீங்கதானே, இப்பவும் டச்ல இருக்கீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இவர், நடுவுல டச் இல்லை. அதனால பேசலை. ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது ஆர்வமா, 'எப்படி இருக்கீங்க, உங்க லைஃப் எப்படிப் போகுது, என்ன படம் பண்றீங்க?’ன்னெல்லாம் கேட்டார்.

விண்ணைத்தாண்டி வருவாயா என்னோட ஆல்டைம் பேவரைட், அவரைப் பாராட்டினதும் வெட்கத்தோட சிரிச்சார் என்றும் சிம்பு செம டீஸன்ட், ரொம்ப எனெர்ஜிடிக்காப் பேசுவார் எனவும் கூறியுள்ளார்.

Share |
Previous Page Next Page HOME