உர்ர்ரென இருக்கிறாராம் விஜய். இது தலைவா படத்திற்கு தமிழகம் முழுக்க கிடைத்திருக்கும் விமர்சனங்களால் அல்ல. தனக்கென்று ஒரு பிரச்சனை வந்தபோது இந்த சினிமாவுலகம் கைகழுவி விட்டுவிட்டதே என்கிற கவலையால். இதே மாதிரி ஒரு சூழ்நிலை கமலுக்கு வந்த போது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களும் கூடிவிட்டார்கள்.
கமல், என்னால யாருக்கும் தர்மசங்கடம் வேண்டாம். என் பிரச்சனையை நான் மீடியாகிட்ட சொல்லிக்கிறேன் என்று சொல்லியும் கூட அவருக்கு ஆதரவு கரம் பெருகி கொண்டேயிருந்தது. ஆனால் தன் விஷயத்தில்?
அஜீத் போனில் பேசினார். சிம்பு மட்டுமேதான் தில்லோடு ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். தனுஷ் போட்ட ட்விட்டுக்கு மறுநாளே வேறு மாதிரி மழுப்பல் கருத்தை அவரே வெளியிட்டார்.
இப்படி ஆளாளுக்கு தன் விஷயத்தில் நடந்து கொண்டது விஜய்யை கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த நேரத்திலும் விஜய்க்கு ஆறுதலாக நடந்த ஒரே விஷயம் இதுதான். ரஜினி போனில் பேசினாராம். தைரியமா இருங்க. லைஃப்ல இது மாதிரி நிறைய பார்க்கணும். உங்களுக்கு என்னோட சப்போர்ட் எப்பவும் உண்டு என்றாராம். இவ்வளவு பெரிய ஸ்டாரே கை கொடுக்க முன் வந்த பின்பு எதற்காக கவலை?
அவரும் ரகசியமாக போனில் பேசிவிட்டு அமைதியாகிவிட்டாரே என்பதால் இருக்குமோ?