டாப்சி நீண்ட ஆசை என்னவாக இருக்கும்

தயாநிதி அழகிரி தயாரிக்கும் 'வடகறி' ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. ஜெய் ஜோடியாக 'சுப்ரமணியபுரம்' சுவாதி நடிக்கிறார். புதியவர் சரவண ராஜன் இயக்குகிறார்.

 நீண்ட முடி வளர்க்க டாப்சிக்கு ஆசையாம். ஆனால் அவ்வப்போது முடியை வெட்டிக்கொள்கிறார். எல்லா படங்களிலும் மாடர்ன் கேர்ள் வேடம் ஏற்பதாலேயே இந்த நிலையாம். சீக்கிரமே கிராமத்து வேடத்தில் நீண்ட முடியும் நடிக்கும் கேரக்டர் கிடைக்க பிரார்த்திக்கிறாராம்.

 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', செப்டம்பர் 6ல் ரிலீசாகிறது. படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்தி படங்களின் நடிகர்களை போல, சிவகார்த்திகேயனும் மதுரை, திருச்சி, கோவைக்கு விசிட் அடித்து படத்தை புரமோட் செய்யப்போகிறார்.

 வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடிக்கும் 'காவியத் தலைவன்' படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இப்படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.

 'துப்பாக்கி' இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு விஜய் படத்தை முருகதாஸ் இயக்குவார் என சிலர் புரளி கிளப்பி வருகிறார்கள். ஆனால் அவரோ ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளாராம்.

 'சென்னை 28' படத்துக்கு திரைக்கதை எழுதிய சசிதரன், 'வாராயோ வெண்ணிலாவே' படத்தை இயக்குகிறார். 'அட்டகத்தி' தினேஷ், ஹரிப்பிரியா ஜோடி.

  பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஜெயப்பிரதா நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' டிஜிட்டல் மயமாகி மீண்டும் ரில¦சாக உள்ளது.

Share |
Previous Page Next Page HOME