இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான்! :வரலட்சுமி

போடா போடிக்கு பிறகு சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியுடன் படு கிளாமராக நடித்திருக்கிறார்.

கிளாமராக நடித்திருப்பத பற்றி அவர் கூறியதாவது: நான் அல்ட்ரா மார்டன் பொண்ணு. ரியல் லைப்புலேயே நான் கிளாமரான ஆளு. அப்புறம் சினிமாவுல அப்படி நடிக்குறதுல எனக்கு என்ன தயக்கம். போடா போடியில ஒரு டான்சரா நடிச்சேன். அதுல அதிகமா கிளாமர் காட்டத் தேவையில்லாம இருந்துச்சு. மதகஜராவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். சாங்குல கிளாமர் இருக்கும்.

மார்டன் பொண்ணா வளர்ந்ததால இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான். சுந்தர்.சி சார் தான் என்னை ஒரு பொண்ணா மாற்றி நடிக்க வச்சார். மதகஜராஜா ரிலீசுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு வேற கேரக்டர்ல நடிக்காம இருந்தேன். இனி நல்ல கதைகள் கேட்டு தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

Share |
Previous Page Next Page HOME