பீர் குடித்தால் கற்பழிப்புகள் குறையும் - பூனம் பாண்டே

நாட்டில் நடக்கும் தொடர் கற்பழிப்புக்கு என்ன தீர்வு காண்பது என்று நாடே கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் விஞ்ஞானி பூனம் பாண்டே. பீர் பார்களை திறங்கள், கற்பழிப்பு குறைஞ்சிடும் - இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு.

மும்பை பெண் புகைப்பட கலைஞர் பாலியல் பலாத்காரத்தால் நாடு கொந்தளித்துப் போயுள்ளது. பூனம் பாண்டேயை போல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதும், நடிப்பதும்தான் கற்பழிப்புகள் பெருக காரணம் என ஒரு கலாச்சார காவலர் குரூப் குற்றம்சாட்டியது. அவ்வளவுதான் உடம்பில் இருக்கிற ஒன்றரையடி துணியையும் வ‌ரிந்துகட்டி சண்டைக்கு வந்துவிட்டார் பூனம்.


நான் போடுற ட்ரெஸ்தான் கற்பழிப்புக்கு காரணம்னா நான் மீடியாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மட்டும் கற்பழிக்காமலா இருந்தாங்க? பெண்கள் போடுற ட்ரெஸ்தான் ஆண்களை செடியூஸ் பண்றதுங்கிறது எந்த விதத்தில் நியாயம்?

அஞ்சு வயசு குழந்தையைக்கூட ரேப் பண்றாங்களே. நான் சும்மா பேசுவேன், எதுவும் செய்ய மாட்டேன். ஆனா இங்க நிறைய பிரபல நடிகைகள் இருக்காங்க. என்னைவிட ஐட்டம் டான்சில் அவங்கதான் அதிகம் எ‌க்ஸ்போஸ் பண்றாங்க என்று ஒரேயடியாக போட்டு வாங்கியிருக்கிறார்.

பிரச்சனையை பேசினால் போதுமா? தீர்வு சொல்ல வேண்டாம்? பீர் பார்களை திறந்தால் இந்த கற்பழிப்பு எல்லாம் ஒரேயடியா குறைஞ்சிடும் என்றிருக்கிறார் பூனம்.


அப்படிப்போடு... குடித்து ஆண்மை போன பிறகு எவனால் பாலியல் பாலாத்காரம் செய்ய முடியும்?

Share |
Previous Page Next Page HOME