தனுஷ் - கே.வி.ஆனந்த் கூட்டணியுடன் இணைவாரா கார்த்திக்?

நடிகர் தனுஷ் படத்தில் கார்த்திக் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றான் தந்த அடி காரணமாக நிறுத்தி நிதானித்து அடுத்த ஸ்கி‌ரிப்டை தயார் செய்கிறார் கே.வி.ஆனந்த்.

கதாநாயகன் தனுஷ், இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். ஏ‌ஜிஎஸ் படத்தை தயா‌ரிக்கிறது.

அயன், மாற்றான் போல, இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்திற்காகவும் வெளிநாடு செல்கிறார் கே.வி.ஆனந்த்.

படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

அலியா பட் முதல் பல நடிகைகளின் பெயர்கள் மீடியாவால் முன்வைக்கப்பட்டதை கே.வி.ஆனந்த், அவர்கள் யாரும் நடிக்கவில்லை என மறுத்துள்ளார்.

இந்நிலையில் முக்கியமான வேடத்தில் நடிக்க கார்த்திக்கிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் அவ‌ரிடமிருந்து இதுவரை பாஸிடிவான பதில் வரவில்லை என்கிறார்கள்.

செப்டம்பர் 2ம் தேதி புதுச்சே‌ரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share |
Previous Page Next Page HOME