சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சப்பை ஷூட்டிங்குகள் முடிந்து விட்டது.
படத்தை பற்றி இயக்குனர் ராகவன் கூறியிருப்பதாவது: “நம்முடைய உறவுகள்லேயே மிகவும் உன்னதமானது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு, முதன்முறையா ராஜ்கிரண் தாத்தாவா நடிக்கிறார். அம்புட்டு வயசானவனா நடிக்கிறது நல்லா இருக்காதுன்னு முதல்ல யோசிச்சவரு கதைய கேட்டபிறகு உடனே ஒத்துக்கிட்டார். பேரனா விமல் நடிச்சிருக்காரு. ரெண்டு பேரும் பண்ற கலாட்டாக்கள்ல சிரிப்பு வெடிக்கும், சென்டிமெண்டுல அழுகை வெடிக்கும். லட்சுமிமேனன் மார்டன் பொண்ணா நடிச்சிருக்காங்க. கும்கியில பார்த்த மலைஜாதிப் பொண்ணா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்கும். கிராமத்துலேருந்து சென்னைக்கு வர்ற அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் லைஃப் ஸ்டோரி இது” என்கிறார் ராகவன்.