கவுண்டர் கழன்று கொண்டது எதனால்?

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு அர்ச்சனை நடத்திக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி.

உயரே பறக்கிற கொடி ஒரு ஸ்டெப் இறங்கினாலும் அதற்கு அர்த்தமே வேறு. கொஞ்சகாலமாக கவுண்டரை அந்த பார்வை பார்க்கிறாராம் அர்ஜுன். இத்தனைக்கும் இவருக்கும் அவருக்குமான காம்பினேஷன் ஹிட்டாகி அந்த காலத்திலேயே அள்ளோ அள்ளென அள்ளியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சரி... இப்போ என்ன பஞ்சாயத்து?

தானே தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஜெய்ஹிந்த் பார்ட் 2 வில் நடிக்க கவுண்டரை அழைத்தாராம் அர்ஜுன். அதுவும் எப்படி தெரியுமா? 'கொஞ்சம் ஆபிசுக்கு வந்துட்டு போறீங்களா?' என்று. 'விஷயம் என்னன்னு சொல்லுங்க' - இது கவுண்டர். இல்லே... 'ஜெய்ஹிந்த் ரீமேக்ல நீங்க நடிக்கணும். வந்தீங்கன்னா சம்பளத்தை பேசி ஒரு அட்வான்சோடு போகலாம்' - இது அர்ஜுன். கடுப்பான கவுண்டர், 'எல்லாரும் என் ஆபிசுக்கு வந்துதான் பேசுவாங்க. இப்ப இது என்ன புதுப்பழக்கம்' என்று கூறியதோடு நமக்கு சரிப்பட்டு வராது என்றும் கூறிவிட்டாராம்.

மடி இளைக்கலாம். கொம்பு இளைக்காதப்பு...

Share |
Previous Page Next Page HOME