கத்தி படத்தில் விஜய் சிறை கைதியா?

 
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாக்கி வரும் படம் கத்தி. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாா். இந்த படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கத்தி படமானது விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும், இந்த படம் தீபாவளிக்கு விருந்தாக வெளிவரவிருக்கிறது. இந்த படம் பற்றி தற்போது ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்தில் விஜய், கைதியாக சிறையில் இருப்பது போல் ஒரு போஸ்டர் வந்துள்ளது. இந்த போஸ்டர் பார்த்ததும் ரசிகர்கள் படத்தில் விஜய் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, பின் தண்டனையை அனுபவித்து, கிளைமேக்ஸில் சிறையில் இருந்து வெளிவருவார் இதுதான் கத்தி படத்தின் கதை என்று இணைய தளத்தில் செய்திகள் பரப்பி வருகின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பதை நாம் திரையில் தான் காண வேண்டும். இந்த புகைப்படத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. யாரோ சில விஷமிகள் ட்ரைலரில் இருந்து ஸ்கீரின் ஷாட் எடுத்தது போல் உள்ளது.


 tags: kaththi news, kaththi latest news, kaththi movie stills, vijay news, vijay latest news, samantha news, samantha latest stills, kaththi news stills, kaththi review, kaththi preview, கத்தி ஸ்டில்ஸ், கத்தி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ், கத்தி விமா்சனம்,விஜய், சமந்தா, முருகதாஸ்

Share |
Previous Page Next Page HOME