ரூட் கிளியர்: கத்திக்கு யு சர்டிபிகேட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி தீபாவளிக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஆம் இதனை உறுதி செய்யும்விதமாக உள்ளது முருகதாஸின் ட்விட். கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது.

என்ன என்ன சொல்லப்போகிறார்களோ என்று கோடம்பாக்கம் திகிலோடு காத்திருக்க, க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார் அமைப்பு. இதை தொடர்ந்து வரிவிலக்கு ஷோ ஒன்றும் தனியாக ஏற்பாடு செய்யப்படும். இதையெல்லாம் பார்க்கும்போது தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்த செய்தி.

முருகதாஸ் ட்விட் செய்வதற்கு சில நொடிகளுக்கு முன்பே விஜய்யும் தன் ட்விட்டர் தளத்தின் மூலம் அதிகாரபூர்வமாக இந்த செய்தியை பரவ விட்டிருக்கிறார்.

இனி கொண்டாட தயாராகுங்கள் ரசிகர்களே!!!

Share |
Previous Page Next Page HOME