சச்சின் சாதனையை முறியடித்தார் காஜல் அகர்வால்.

கூகுள் இணையதளம் ஒவ்வொரு வருடமும் அதிகமாக தேடப்பட்ட நபர் குறித்த விபரங்களை அறிவிக்கும். அதுபோல இந்த வருடத்தில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்டவர் சன்னிலியோன் என்பது தான் ஆச்சரியம். ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் தற்போது பாலிவுட்டில் நன்றாக காலூன்றியதால் இவரை அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை சல்மான்கானும், காத்ரீனா கைப்பும் பிடித்துள்ளனர். நான்காவது இடத்தில் தீபிகா படுகோனேவும், ஐந்தாவது இடத்தில் ஷாருக்கானும் உள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் காஜல் அகர்வால் இந்த வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். சச்சினுக்கு ஒன்பதாவது இடமே கிடைத்துள்ளது. சச்சினைவிட காஜல் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் படவுலகத்தை மட்டும் கணக்கெடுத்த வகையில் கூகுளில் அதிக நபர்களால் தேடப்பட்ட நடிகர்களில் முதல் இடத்தை  சல்மான்கான் பிடித்துள்ளார். நடிகைகளில் முதலாவது இடத்தை பிடித்துள்ளவர் காத்ரீனா கைப். நடிகர்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஷாருக்கானும், ரன்வீர்சிங்கும், நடிகைகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தீபிகா படுகோனேவும், கரீனா கபூரும் பிடித்துள்ளனர்.

Share |
Previous Page Next Page HOME