நான் “கற்றிந்த மொத்த வித்தையும் இறக்குவேன்“ என்று அடம் பிடிக்கும் பிரேம்ஜி


வெங்கட் பிரபு பிாியாணி படத்தையடுத்து சூா்யாவை வைத்து இயக்கும் படம் தான் மாஸ். வெங்கட் பிரபு கதை இல்லாமல் படத்தை எடுத்தாலும் எடுப்பாா் ஆனால் அவா் தம்பி பிரேம்ஜி இல்லாமல் படத்தை எடுக்க மாட்டாா் என்று ஒரு நிகழ்ச்சியில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. அதனால் என்னவோ!! இந்த படத்திலும் தன் தம்பியை சூா்யாவுடன் சோ்ந்து நடிக்க வைத்துள்ளாா்.

சாி விஷயத்திற்கு வருவோம்!! அஞ்சான் படம் குறித்து இயக்குநா் லிங்குசாமி ஒரு பேட்டியில், நான் கற்றிந்த மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியுள்ளேன் என்று கூறிய செய்தி நாம் அறிந்ததே. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்த போது அவா் கூறிய அந்த பொன்னான மொழியான  “என்னுடைய மொத்த வித்தையையும் இறக்குறேன்" என்ற வரிதான் நமது தமிழக இளைஞா்களிடையே நக்கல் மந்திரமாகவும் தாரக மந்திரமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அவரை நக்கல் அடித்தும் கிண்டல் செய்தும் கேலிசித்திரங்களை வரைந்தும் பேஸ்புக் மற்றும் சமுக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில்  வெங்கட் பிரபும்  ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். பிரேம்ஜியின்  ஸ்டைல் நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அவர் எப்போது பார்த்தாலும் ஒரு வரி டயலாக்கை திருப்பி திருப்பி படம் முழுவதும் சொல்லி கொண்ட இருப்பார் .

அவர் கூறிய சரோஜா சாமான் நிக்காலோ’  என்ன கொடுமை சார், இந்த மாதிரியான ஒரு பஞ்ச் டயலாக்கை தேடி வந்தார். பின்னர்  "மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ ,  என்ற பாணியில் வெங்கட் பிரபுவிடம் ஒரு வரியை பிரேம்ஜி தனது பாணியில் சொன்ன போது அவரே குப்பற விழுந்து சிரித்து விட்டாராம்.

இது வேண்டாம் என்று தனது தம்பி பிரேம்ஜியிடம் கூறியுள்ளார். ஆனால்  இந்த படத்துக்கு இது தான் என்னுடைய பஞ்ச் என்று சொல்லிவிட்டாராம். இது தான் என் ஒரு வரி பஞ்ச் என்று பிரேம்ஜி அடம் பிடிக்கிறாராம்.  சூர்யா வைத்து இயக்கிய லிங்குசாமியை இதிலும் கிண்டல் செய்தால் பிரச்சனை ஆகிவிடும், அதுவும் இல்லாமல் வெங்கட் பிரபு லிங்குசாமிக்கு சப்போர்ட் செய்து வேற பேசியுள்ளார். இதனால் பிரேம்ஜிக்கு என்ன!!!  வெங்கட் பிரபுக்கு தானே பிரச்சனை!!....

tags: venkat prabhu, premji, surya, director lingusamy, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, டைரக்டா் லிங்குசாமி, சூா்யா, தமிழ் சினிமா செய்திகள்

Share |
Previous Page Next Page HOME