ரஜினி வீட்டு சாப்பாடு தான் எனக்கு வரும்: தீபிகா படுகோனே ருசிகர தகவல்


ரஜினி மகள் தயாாித்த கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இவர் தற்போது நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே பேசியதாவது, எல்லோரும் என்னை பாா்த்து கோச்சடையான் படத்துக்கு பிறகு தமிழ் படங்களில்  நடிக்காதது ஏன்? என்று கேட்கிறாா்கள். எந்த மொழி படமாக இருந்தாலும் நடிக்க தயார். ஹீரோ யார் என்று பார்த்து நான் நடிப்பதில்லை. படத்தில் என்னுடை கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கிறதா என்றுதான் பார்த்து ஒப்புக்கொள்கிறேன்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. நான் சென்னை வரும்போதெல்லாம் ரஜினி வீட்டிலிருந்து எனக்கு சாப்பாடும் வந்துவிடும். அவர்கள் எனது குடும்பத்தின் அங்கத்தினர்கள் போன்றவர்கள். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.

tags: padukone, deepika padukone, latest deepika  news, rajini news, kochadaiyaan, latest tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள், தீபிகா படுகோனே, கோச்சடையான், ரஜினி, rajini news 

Share |
Previous Page Next Page HOME