வாலு படமானது இழு இழு என்று இழுத்து கொண்டே போகிறது. அடடே!! என்ன இது புது கதையாக இருக்கிறது. ஆமாங்க!! சீதாபிராட்டி தேடி
அனுமன் இலங்கைக்கு போன போது அனுமனுடைய வால் நீண்டு கொண்டே போனது போல தான் இந்த கதையும் இருக்கிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லங்க!! மூன்று வருடங்களாக சவ்வு மிட்டாய் போல தாங்க!!
தற்போது சிம்பு தனது மனநிலையை மாற்றி வாலு படத்திற்குகான டேட்ஸ் கொடுத்து விட்டது தாங்க பெரிய காரியம். இதனால் படப்பிடிப்பும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில்தான் வந்தது பாருங்க மீண்டும் ஒரு சோதனை. வாலு படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்து வந்தாரல்லவா!! அவரால் தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது ஹன்சிகா கால்ஷீட் இரண்டே நாள் மட்டும் கிடைத்தால் போதும் படம் விரைவில் முடிந்து விடும் என்ற காரணத்தால், தமிழ் சினிமாவிலும், ஆந்திராவிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவிடம் பேசி, ஒரு வழியாக கால்ஷீட் வாங்கி விட்டார்களாம்.
அவரிடம் கஷ்டபட்டு வாங்கிய கால்ஷீட்டை எப்படி பயன்படுத்தியிருக்க வேண்டும்? ஷீட்டிங் நடத்தாமல் இழுத்தடித்து விட்டார்களாம். என்ன காரணமோ தெரியல. இதனால் கடுப்பான ஹன்சிகா, இந்த பக்கம் கால்ஷீட்டு, கேட்டு வராதீங்க என்று கோபமாக கூறிவிட்டாராம். இதனால் வாலு வழி தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறது.
இத விட என்ன கொடுமை தெரியுமா? இவ்வளவு பிரச்சனை இருக்கு, எந்த தைரியத்தில் வாலு படத்தை நாங்க தீபாவளிக்கு திரையிடுவோம் என்று சிம்பு ட்விட்டரில் போட்டு வருகிறார் என்று தெரியல.
![]()



