தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிற விசயம் உதயநிதி- காஜல் மோதல்தான். தனது நண்பேண்டா படத்தில் நடிக்க ரூ.40 லட்சம் கொடுத்ததாகவும்.ஆனால் பின் அந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதனால் தான் கொடுத்த முந்தொகையை உதயநிதி காஜலிடம் கேட்க அவரோ தரமுடியாது என பிடிவாதம் பிடிக்க விசயம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றுள்ளது.ஆனால் இதில் ஒரு விசயம் யோசிக்க வேண்டியுள்ளது. நாற்பது லட்சம் என்பது உதயநிதிக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றினால் என்ன நடக்கும் என்பது காஜலுக்கு தெரியாமலும் இல்லை. அப்புறம் எப்படி வந்தது பிரச்னை? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு யோசித்தால் கொடுத்த பணம் குறையுதே? அதை நேரடியாக விசாரித்தால் சரி வராது. இப்படி பிரச்னை செய்தால் பூனை தானாக வெளியே வந்துவிடும் என்று நினைத்தாராம் உதயநிதி. அதன் விளைவாகதான் காஜல் மீது புகார் என கூறப்படுகிறது.
உங்க படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு தரல. அதனால், நீங்க எனக்கு கொடுத்திருந்த உங்க அட்வான்ஸ் பணத்தை எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று முன்பே சொல்லிவிட்டாராம் காஜல். அதுமட்டுமல்லாமல் பார்க்கிற இடங்களில் எல்லாம் பணத்தை எப்ப வாங்கிகிறீங்க ஒரே நச்சரிப்பாம். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி காஜலின் நச்சரிப்புக்காகவே பணத்தை வாங்க சம்மதித்தாராம் உதயநிதி.ஆனால் அவர் திருப்பி தருவதாக சொன்ன தொகைக்கும், உதயநிதி கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகைக்கும் சம்பந்தமேயில்லாமல் இருந்ததாம்.
’நான் கொடுத்தது அதிக தொகையாயிற்றே’என்று இவர் ஒரு தொகையை கூற, ‘ நீங்க கொடுத்ததா இவ்வளவுதான் வந்தது’ என்று காஜல் ஒரு தொகையை கூற, அப்போதுதான் புரிந்தது நடுவில் ஒருவர் அமுக்கியதை. அந்த புண்ணியவான் வேறு யாருமல்ல. காஜலின் மேனேஜர்தான். நல்ல பழகுன மனுஷன். நம்ம கூப்பிட்டு கேட்டா நல்லாயிருக்காது. பிரச்சனையை பஞ்சாயத்துக்கு கொண்டுபோவோம். அப்புறம் உண்மை தானாகவே வெளியே வந்துடும் என்று பேசி வைத்துக் கொண்டுதான் அடுத்த கட்டத்திற்கு போனார்களாம் இருவரும் என்று கூறப்படுகிறது.
எப்படியோ உங்களால் கடந்த ஒருவாரமாக மீடியாக்களுக்கு நல்ல தீனிதான்!!!
Tag: udhayanidhi stalin,udhayanidhi stalin next movie,udhayanidhi stalin with kajal issue,kajal agarwal latest news,

![]()