சிகரம் தொடு விமர்சனம் Sigaram Thodu Review

இந்தியாவில் பரவலாக நடைபெற்று வரும் ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தை கருவாக கொண்டு வந்திருக்கும் படம் சிகரம் தொடு. ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட்,காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பக் காட்சியிலேயே ஒருவருடைய மார்பில் துப்பாக்கி குண்டு நுழைய, பின் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட கதை பின்னோக்கி செல்கிறது. காவலராக பணியாற்றும் சத்யராஜ் ஒரு கலவரத்தின் போது கால்களை இழந்து விடுகிறார். அதன் பிறகு காவல்துறையின் சிஆர்பி பிரிவில் பணியில் சேருகிறார். அவரது மகன் விக்ரம்பிரபு வங்கியில் உதவி மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டு காத்திருக்கிறார். ஆனால் சத்தியராஜோ தன் பையன் மூலம் காவல்துறையில் சேர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் விக்ரம் பிரபுவுக்கோ போலீஸ் துறையின் மீது விருப்பமே இல்லை.காரணம் அப்பாவுக்கு நடந்த சம்பவமும் ஒன்று.

இந்நிலையில் சுற்றுலா செல்லும்போது மோனல்காஜலை சந்திக்கிறார்.அங்கு இருவருக்கும் வழக்கம்போல மோதலுக்கு பின் காதல் வருகிறது. மோனலுக்கும் தனது கணவர் காவல்துறையில் இருக்ககூடாது என்ற கொள்கை. ஏற்கெனவே நாயகனுக்கு அந்த கொள்கைதான். இனி சொல்லவேணுமா கொள்கை இன்னும் தீவிரமாகிறது. ஆனால் சூழ்நிலை இன்ஸ்பெக்டர் ஆக்குகிறது. மோனலிடம் விக்ரம் பிரபு பேங்க் மேனேஜர் டிரைனிங்க்கு சிம்லா போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னைக்கு போலீஸ் டிரைனிங்கு போகிறார். டிரைனிங்கிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கிறுக்குத்தனங்கள் செய்ய, கடைசியில் விதி சில நிபந்தனையுடன் அவர் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.

ஒருசமயம் அவர் பணிபுரியும் ஏரியாவில் ஏடிஎம்மில் பணம் திருட சிலர் முயற்சிக்க, சத்யராஜ் அவர்களுடன் மோதி தன் மகனிடம் பிடித்துக்கொடுக்க, வழக்கம்போல திருடர்கள் சிறையிலிருந்து தப்பிக்க, அப்போது பார்த்து சத்யராஜ் அங்கு வர, அவரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு செல்கின்றனர் திருடர்கள். சத்யராஜ் பிழைத்தாரா? விக்ரம் பிரபு திருடர்களை பிடித்தாரா? அவரது காதலியை கை பிடித்தாரா என்பதை காமெடி திரில்லர் என பரபரப்பாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் இடைவேளை வரைக்கும் எடிஎம்மில் கொள்ளையடிக்கும் கும்பலை அவ்வப்போது காட்டினாலும் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும்,சதீஷ் கலாய்க்கும் காட்சிகளுமே வருகிறது.முதல்பாதி படு ஜாலியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இடைவேளைக்கு பின்னரும் சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், லொள்ளுசபா சாமினாதன் என காமெடிக்கு பஞ்சமில்லை.

அப்பாவை ஏமாற்றும் பையனாக விக்ரம்பிரபு. வங்கியில் துணை மேனேஜர் ஆகும் ஆவலில் மேனேஜரிடம் காக்கா பிடிப்பது, சதீஷுடன் கலாய்ப்பது, பின் பாதியில் இன்ஸ்பெக்டராகவும் கலக்கியிருக்கிறார். அதிலும் சதீஷ் விக்ரம்பிரபு கூட்டணி இடைவேளை வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜர் நடித்திருக்கிறார். பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. சத்யராஜ் இதில் தந்தை வேடம். ஒரு காலை இழந்தவராக நடித்திருக்கிறார். மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கிறார். அதிலும் ஏ.டி.எம் திருடகளிடம் அவர் மோதும் காட்சி அட்டகாசம்.

இசை டி.இமான். ”பிடிக்குதே மற்றும் சீனு சீனு பாடல்கள் மனதை கவர்கிறது. பின்னனி இசையிலும் அவரது உழைப்பு தெரிகிறது. விஜய்

உலகநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதிலும் ஹரித்துவார் மலைக் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
படத்தை இயக்கியிருப்பது மட்டுமல்லாமல் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார் கௌரவ். தூங்கா நகரம் படத்துக்குபின் இவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். நல்ல திரில்லர் சப்ஜெக்டை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் சிகரம் தொடு ரசிகர்களை கவரும்

Tag: sigaram thodu reviews,sigaram thodu review,sigaram thodu songs,sigaram thodu songs free download,sigaram thodu trailer, sigaram thodu heroin, sigaram thodu wiki
arima nambi,ivan vera mathiri,vikram prabhu,sigaram thodu tamil movie, sigaram thodu stills
sigaram thodu heroine, monal gajjar, monal gajjar latest stills, monal gajjar hot stills, monal gajjar biography,monal gajjar date of birth,monal gajjar facebook,monal gajjar feet,monal gajjar ragalahari
monal gajjar hot videos

Share |
Previous Page Next Page HOME