சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்: நாளை 9 படங்கள் ரிலீஸாம்


சினிமா உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது. ஆமாங்க! இந்த ஆண்டு தமிழ் சினிமா உலகில் மட்டும் நினைத்து பாா்க்க முடியாத அளவிற்கு அதிக படங்கள் ரிலீசாகிக்கிறது. இது வரலாறு காணாத வெற்றியாகும். தற்போது உள்ள நிலையில் ஒரு வாரத்திற்கு சுமாா் 4 முதல் 9 படங்கள் வரை வெளிவருகிறது. இதை உண்மையாக்கும் விதத்தில் நாளை மட்டும் (அதாவது செப்டம் 19) தேதி 9 படங்கள் வெளி வர இருக்கிறது.

அந்த வாிசையில் நாளை  ரிலீசாகும் படங்களில் சுந்தா். சி இயக்கியுள்ள, அரண்மணை மட்டுமே பெரிய பட்ஜெட் படம். சுந்தா்.சி என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது. ஏற்கனவே அவா் இயக்கிய கலகலப்பு அந்தளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது நாம் அறிந்ததே. அதுவும் இந்த படம் திரில்லர் காமெடி படம். இதில் வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 அடுத்த படம் ஆடாம ஜெயிச்சோமடா நாளை ரிலீசாகிறது. இதுவும் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக கருணாகரன் நடித்துள்ளார். இவா் காமெடி நடிகராக அறிமுகமானவா். இவா் பீட்சா, யாமிருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளாா். தில்லுமுல்லு படத்திற்கு பிறகு பத்ரி இயக்கியுள்ள அடுத்த படம்.  இது கிரிக்கெட் சூதாட்டத்தை கதை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். ஹீரோயின் விஜயலட்சுமி. சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

 நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ரெட்டவாலு நாளை ரிலீசாகிறது. கல்லூரி அகில், காதல் சரண்யா நடித்திருக்கும் படம். வாலுத்தனமாக சுற்றித் திரியும் ஒருவனுக்கு வரும் காதலும், பிரச்சினையும் கதை.

 ஆள் படம் வித்தியாசமான க்ரைம் திரில்லர். ஒரு இளைஞனை தீவிரவாதிகயாக்க நினைக்கும் ஒரு சர்வதேச தீவிரவாத கும்பலிடமிருந்து அந்த இளைஞன் தப்பித்தானா, தீவிரவாதியாகிறானா? என்கிற கதை.

மடிசார் மாமி டைட்டிலுடன் ஆரம்பிக்கப்பட்ட படம், டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இனிப்பு புளிப்பு என்ற பெயரில் ரிலீசாகிது. இது பேமிலி காமெடிப் படம்.

கூலிக்காக கொலை செய்யும் ஒருவன். தான் செல்போனிலேயே காதலிக்கும் தன் காதலியை அவர் யார் என்று தெரியாமல் கொல்கிற கதை தமிழ்செல்வனும்  கலைச் செல்வியும்.

உசிலம்பட்டி பஸ் நிலையத்தையே வீடாக கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கையை சொல்லுகிற படம் நான் பொண்னொன்று கண்டேன்.

இதுதவிர புதியவர்கள் இயக்கிய மைந்தன் என்ற படமும். ரகசிய தீவு என்ற ஆங்கில அனிமேஷன் படமும் ரிலீசாகிறது.

சினிமா ரசிா்களுக்கு நாளை தீபாவளி போல கொண்டாட்டம் தாங்க!!!

tags: sundar c aranmanai, aal movie stills, rettai vaalu movie stills, aadama jecichomada movie stills

Share |
Previous Page Next Page HOME