விஜய் படத்தில் மட்டும்தான் வசனம் பேசுவார்: இந்த பிரச்சனை குறித்து அவர் எதுவும் பேசியதாக தெரியவில்லை: சுபாஷ்கரண் அல்லிராஜ்

விஜய் தற்போது லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் அனிருத் இசையயமைக்கிறார். இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்று கூறி மாணவர் அமைப்புகள் உட்பட மொத்தம் 65 அமைப்புகள் இந்த படத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், கத்தி படத்தை எதிர்ப்பவர்கள் சுயவிளம்பரத்திற்காக படத்தை எதிர்க்கின்றனர். இதுதொடர்பாக நானும் யாரிடமும் பேச தயாராக இருக்கிறேன்.
எங்கள் நிறுவனம்  பல மில்லியன் டாலர்களை கொண்டு இயங்கி வருகிறது. ராஜபக்சேவின் உதவியோ அல்லது வேறு எவருடைய உதவியோ எங்களுக்கு தேவையில்லை.

எங்கள் ஒரே குறிக்கோள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான்.
ராஜபக்சேவுடனோ அல்லது அவரது உறவினர்களுடனோ எங்களுக்கு எவ்வித உறவும் இல்லை.லைகா என்ற பெயர் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பிராண்ட் என்பதால் அந்த பெயரை தயாரிப்பு நிறுவத்திற்கு வைத்துள்ளோம்.

கத்தி படத்தை ரிலீஸ் செய்வது ஒரு சாதாரண விஷயம். இந்த சின்ன விஷயத்திற்காக பிசியாக இருக்கும் தமிழக முதல்வரை சந்திக்க விரும்பவில்லை. கத்தி படத்தை தயாரிக்க நாங்கள் செலவழித்த தொகை எங்கள் நிறுவனத்தின் இரண்டே நாள் வருமானம். நான் பணம் சம்பாதிப்பதை மட்டும் விரும்பியிருந்தால் இந்தியில் படமெடுத்திருப்பேன்.

நடிகர் விஜய், படத்தில் மட்டும்தான் ஏதாவது வசனம் பேசியிருப்பார். இந்த பிரச்சனை குறித்து அவர் எதுவும் பேசியதாக தெரியவில்லை.

படத்தை ரிலீஸ் செய்ய பத்திரிகையாளர்களாகிய உங்கள் ஆதரவு இருந்தால் எனக்கு போதும். வேறு எவருடைய ஆதரவும் தேவை இல்லை


தமிழக மக்களுக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். நான் ஒரு தமிழன், அதனால் தமிழ் படங்கள் எடுக்க எண்ணினேன், தொடர்ந்து நிறைய தமிழ் மற்றும் இந்தி படங்களை எடுப்பேன். கத்தி படத்தை யாருக்கும் கைமாற்றிக் கொடுக்கப்போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டையும், திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.

Tag: kaththi latest news,subashkaran interview about kaththi issue,kaththi review,

Share |
Previous Page Next Page HOME