பிரமாண்ட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில் பிரமாண்ட தயாாிப்பு நிறுவனம் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஐ'.
இதில் விக்ரம், எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் ஐ படத்தின் ஆடியோவை ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் எதற்காக வந்தாரோ அதையே செய்யாமல், பாதி நிகழ்ச்சியிலேயே நடையை கட்டி விட்டார். காரணம், மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தான் துவங்கியது. மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் பல குளறுபடிகள்.
இதனால் பொறுமை இழந்த அர்னால்டு, திடீரென்று மேடைக்கு சென்று சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே கிளம்பி சென்றுவிட்டார். அப்புறம் என்ன, விழாவிற்கு வந்திருந்த ரஜினிதான் ஐ படத்தின் ஆடியோவை வெளியிட்டார். அதை கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
tags: i autio release function reject the Arnold, sankar, vikram, i movie stills, i movie review, i review ஐ ஆடியோ வெளியீட்டு விழாவில் பாதியிலேயே கிளம்பிய போன அர்னால்டு
![]()
.jpg)


