7ஜி கூட்டணியை மீண்டும் இணைத்து வைக்கும் தனுஷ்


செல்வராகவன் துள்ளுவதோ இளமை 'காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களும் ஒரு காரணம் என்பது உண்மை.

ஆனால் என்ன காரணத்தினாலோ புதுப்பேட்டைக்கு பின் செல்வராகவன் யுவன்ஷங்கர் ராஜாவை விட்டுப் பிரிந்தார். யுவன் இசையமைக்காமல் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதன் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.ஆனால் அது வதந்தியாகவே இருந்து வந்தது.

ஆனால் தற்போது செல்வராகவன் தனது அடுத்தப் படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துள்ளாராம். அதோடு அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ஒளிப்பதிவாரளராகப் பணியாற்றி அரவிந்த் கிருஷ்ணாவையும் இணைத்துவிட முடிவெடுத்துள்ளாராம். இந்தப் படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

எப்படியோ ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல விருந்து கிடைப்பது உண்மை!!!

Share |
Previous Page Next Page HOME