ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அல்வா கொடுத்த சந்தானம்

ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி 1978-ம் ஆண்டு இயக்கி நடித்த பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் வரவேற்ப்பை பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து 1983-ல் திரைப்படமாக ரிலீசாகி அதுவும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை மீண்டும் அறங்கேற்ற நினைத்து வருகிற 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் ஓய்.ஜி மகேந்திரன்.

இது குறித்து அவர் கூறுகையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற பரீட்சைக்கு நேரமாச்சு நாடகம் இப்போதைய தலைமுறிக்கும் பிடிக்கும்.அந்த நம்பிக்கையில் மீண்டும் அறங்கேற்றம் செய்கிறோம்.அதுமட்டுமின்றி நாடகம் என்பது நடிகர்களின் திறமையை வெளிப்படுத்தக் கூடியது. அதுமட்டுமல்ல, இந்த நாடக்கலை அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீதுள்ள காதலால் இதை
நான் நடத்துகிறேன். ஒரு முறை நடிகர் சந்தானம் பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை பார்த்தார்.மிகவும் நல்லாருக்கு. இந்த நாடகத்தை திரைப்படமாக்கி அதுல நானே நடிக்கிறேன்னு சொன்னார். மிகவும் சந்தோசப்பட்டேன். ஆனால் சொல்லிட்டு போனார். 2 வருஷமாச்சு. அதுக்கப்புறம் ஆளையேக் காணோம் என்றார் ஒய்.ஜி.

ரஜினி சார் கூட என்னிடம் ஒரு நாடகம் பண்ணலாம்னு சொன்னார். கண்டிப்பா அவரோட ஒரு நாடகம் பண்ணுவேன். அதுல அவர் நடிப்பார்னு  நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

Tag: santhanam latest news, paritchaikku neramachi drama news,santhanam, y.g.magendran,rajini,

Share |
Previous Page Next Page HOME