இதெல்லாம் நியாயமா?விஜய்க்கு வைத்ததை கைப்பற்றிய ஜெய்


எல்லோரும் ரஜினி ரசிகா் என்று சொல்லி கொள்பதில் தான் பெருமை என்று நினைப்பாா்கள். பிறகு அஜித், விஜய் என்று மாறி மாறி சொல்லுவது தான் வழக்கம். இந்த லிஸ்டில் இப்போது இணைந்து இருப்பவா் நடிகா் ஜெய். ஆமாங்க!! நடிகா் ஜெய் தன்னை அஜீத் ரசிகன் என்று மாா்தட்டி கொண்டு சொல்லி வந்தாா். அதற்கென்ன? என்கிறீா்களா? அவருக்கு இப்பொது வந்துள்ள ஆசை என்ன தொியுமா? விஜய் இடத்தை எப்படியாவது பிடித்து விடுவது என்பது தாங்க!! அதெப்படிங்க முடியும்? விஜய் எங்க? இவா் எங்க? எட்டா கனிக்கு ஆசை படலாமாங்க?

சாி விஷயத்து வருவோம்!! இளைய தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்காக தோ்வு செய்யப்பட்டிருந்த தலைப்பு தன் வசம் வந்துள்ளதை எண்ணி துள்ளி குதிக்கிறாா் ஜெய்.

இதன் அக்கு வோ் ஆனிவோ் விபரங்கள் யாதெனில்,
டைரக்டா் மணிமாறன் இயக்கிய என்.ஹச் 47 படத்தை அடுத்து, மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளாா். இந்த படத்தில் தான் ஜெய் ஹீரோவாக நடிக்கயுள்ளாா். இயக்குநா் மணிமாறன் இந்த படத்திற்கான தலைப்பை தான் புகழ் என்று வைத்திருந்தாராம். சாி அதற்கென்ன? இதில் தான் விசயமே இருக்குகோங்க!! இந்த தலைப்பானது ஆஸ்காா் ரவிச்சந்திரன் விஜய்க்காகவே பதிவு செய்து வைத்திருந்தாராம். எப்படியாவது விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி ஒரு படத்தை தயாாிக்க வேண்டும் என்று எண்ணி, அந்த படத்திற்கான தலைப்பு முதற்கொண்டு தோ்வு செய்து வைத்து காத்துக் கொண்டிருந்தாராம். ஐ படத்தின் கலவரத்தில், அந்த படத்திற்கான புகழ் என்ற தலைப்பை மீண்டும்  ரினுவல் செய்ய மறந்துவிட்டாராம்.

இயக்குநா் மணி விஜய்க்காக வைக்கப்பட்டிருந்த அந்த தலைப்பை தாங்க ஜெய் படத்திற்கு வைத்தி விட்டாா். இதை செய்தி ஜெய் காது எட்ட, ஆகா, ஒகோ என்று மகிழ்ச்சியில் துள்ளினாராம். இப்ப விஜயோட தலைப்பு எனக்கு வந்திருச்சு அப்புறம் அவரளவுக்கு நான் வளரனும். இப்ப நான் குட்டி விஜய் போல எண்ணி மகிழ்கிறேன் என்று வெளிப்படையாகவே சொன்னராம் ஜெய். இதெல்லாம் அடுக்குமா?. முறையாக ஆஸ்காா் ரவிச்சந்திரனிடம் பேசி, நாங்கள் அந்த தலைப்பை எங்கள் படத்திற்கு வைத்துக் கொள்கிறோம் என்று கேட்பது தானே நியாயம்? அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.

இந்த மாதிாியான தலைப்பு எல்லாம் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜீத்துக்கு வைக்கக்கூடியது. இதெல்லாம் அடுக்குமா?

Share |
Previous Page Next Page HOME