கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சூர்யாவின் முதல் படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக கெளசல்யா நடித்திருந்தார். வசந்த் இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் தலைப்பை சுசீந்திரன் தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்திற்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீ இதில் நாயகனாக நடிக்கிறாராம்.
குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீக்கு ஜோடியாக சம்ஸ் க்ருதி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்கு முதலில் ‘நேருக்கு நேர்’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களில் ஒரு படத்தின் தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இறுதியில் ‘நேருக்கு நேர்’ என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நல்லு ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் புரடொக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. ஆரோரா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் 6-ந் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி, தொடர்ந்து 30 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது விஷ்ணு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் இவர் இயக்கியுள்ள ஜீவா விரைவில் திரைக்கு வர உள்ளது.
Tag: director suseendran, director suseendran next movie, director suseendran news,

![]()