ஐ படப்பிடிப்பில் கண் கலங்கிய ஷங்கர்


எத்தனை சினிமா வந்தாலும் ரசிர்கள் அனைவருடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஐ. பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கா் தான். இவ்வளவு பெரிய பெருமைகள் எல்லாம் ஷங்கருக்கே உரித்தானவை. தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்கியவர் ஷங்கர். மேலும் இவர் திரைத்துறையில் பல புதிய டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தியவர்.  ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இவர் இயக்கியுள்ள ஐ படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ்கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். ஐ படத்தின் டீசா் வெளியாகி பட்டைய கிளம்பி கொண்டிருக்கிறது. டீசரில் விக்ரமின் நடிப்பினை கண்டு பிரமிக்காதவா்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.  படத்தில் ஒரு பாடல் காட்சியை தவிர மற்ற காட்சிகள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது அந்த பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட நிலையில், ஐ படக்குழுவினர் நேற்று கேக் வெட்டி விடைப்பெற்றனர்.

அப்போது ஷங்கர் இப்படம் இரண்டரை வருட உழைப்பு, என்று உணர்ச்சி பொங்க சொல்லி கண்கலங்கினார்.

tags: I movie news, i movie latest news, diretor sankar news, i movie latest news, vikram news, latest tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள், ஐ மூவி செய்திகள், ஐ விமா்சனம், விக்ரம், டைரக்டா் சங்கா்

Share |
Previous Page Next Page HOME