அஜித்திடமிருந்து லிங்குசாமிக்கு கிடைக்க போவது ரெட்டா? கீாின்னா?


தமிழ் சினிமா உலகில் பொறுத்த மட்டும் எத்தனை அா்னால்டுகள், ஜாக்கிசான்கள் மற்றும் மிகப் பெரிய ஜாம்பான்கள் வந்தாலும் எப்போதும்
நம்ம ரசிகா்களின் மத்தியில் உள்ளூர் நடிகா்களின் படங்கள் அதிக எதிர்பார்ப்புடன் வெளி வருவது தான். அப்படி கேள்வி கேட்கிற
அளவிற்கு ரசிர்களின் ஆவலை ஏற்படுத்திற விதமாக அஜித் படம் எப்போ வரும்? ஐ படம்  எப்போ வரும் என்பது தான்.

இந்தளவுக்கு மக்களின் மனதில் சிகரத்தின் உச்சியில் இருக்கும் அஜித்தின் செல்வாக்கை பயன்படுத்தி கொள்ள விருப்பப்படாத தயாரிப்பாளர்கள்
யாராவது உண்டோ?.

பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது திரைக்கு வந்த அஞ்சான் படத்தின் எதிர்மாறான கருத்தால் தவித்துக்கொண்டிருக்கும் லிங்குசாமியின் ஆசையும் அதுவாக தான் இருக்கிறது.  இதற்கு முன் அஜித் நடித்த ஜி படத்தை இயக்கியவா் லிங்குசாமி என்பது நாம் அறிந்ததே. எப்படியாவது அஜித்துடன் மீண்டும் கைகோர்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். லிங்குசாமியின் அடுத்த பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் உலக நாயகன் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படம் தாங்க!. இதற்கிடையில் தற்போது சிவகார்த்திகேயன் படம் ஒன்றும் இவரது அடுத்த தயாரிப்பு லிஸ்ட்டில் இருக்கிறது.  அட ஆமாங்க! ஜாக்பட் அடுத்த பணக்காராக மாறி பண முதலீடு செய்து கோலிசோடா, மஞ்சப்பை என்று நல்ல படங்களுக்களின் தயாரிப்பாளாரைாய் மாறி, அவற்றை முறைப்படி மக்களிடம் சேர்க்கிற பணியையும் செவ்வனே செய்து வருகிறார் லிங்கு. இந்த சமயத்தில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை விட்டு விடுவாரா என்ன? இது தான் அதிஷ்டம் என்பதோ!!!

அடுத்து அஜித் சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்பது நாம் அறிந்ததே. கதையை கேட்டு முடிந்த கையோடு அஜித் இந்த படத்திற்கான தயாரிப்பாளரை முடிவு செய்து உங்கள் பொறுப்பு என்று கொஞ்சம் கருணை காட்டியுள்ளாராம். தயாரிப்பாளரை தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ள செய்தி லிங்குசாமி காதுக்கு எட்டவே, சிறுத்தை சிவாவை நேரில் வரவழைத்து இது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசிபட்டதாக தகவல் கசிந்துள்ளதாம். தற்போது ‘அஜீத் வாங்கும் சம்பளத்தை விடவும் கூடுதலாகவும், சொல்ல போனால் அவரது பாணியில் ஒயிட் மணியாகவே தந்து விடுகிறேன். மேற்கொண்டு அடுத்த வேலை ஆரம்பிங்கள் என்று கூறிவிட்டாராம் லிங்குசாமி.

இதற்கான ரிசல்ட்  அஜீத் கையில் உள்ளது. கிடைக்க போகும் சிக்னல் ரெட்டா அல்லது க்ரின்னா?  என பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.



tags: ajith news, latest ajith news, lingu samy news,

Share |
Previous Page Next Page HOME