வீரம் படத்துக்கு பின் அஜீத் கௌதம் வாசுதேவமேனன் படத்தில் நடித்துவருவது நமக்கு தெரிந்ததே. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்துக்கு
இன்னும் பெயரிடப்படவில்லை.ஆனால் முக்கால் கிணறு தாண்டியாயிற்று. இதற்கு மேலும் தாமதித்தால் சரிவருமா?. எ.எ.ம்.ரத்னம் மற்றும் கௌதம் இருவரும் ஒரு பெயரை தேர்வு செய்து அஜீத்திடம் வழங்கினார்களாம். அஜீத்துக்கும் அந்த பெயர் பரம திருப்தியாம். இனி முறைப்படி அறிவித்து விடலாம் என்று நினைத்தபோது ஒரு பிரேக் போட்டாராம் அஜீத். அது என்னனா, பெயரை இப்போதைக்கு அறிவிக்கவேண்டாமே.
தற்போது ஐ பற்றி பரபரப்பாக பேசி வருகிறார்கள்.இந்த நேரத்தில் நாம் பெயரை வெளியிட்டால் அனைவரின் கவனமும் சிதறும். அதனால் ஐ பாடல்கள் வெளியீடு முடிந்ததும் நாம் அறிவிக்கலாம் என்றாராம். மற்றவர்கள் படங்களுக்கு தன்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என
நினைக்கும் அஜீத்தை என்ன சொல்லி பாராட்டுவது?
tags: ajith next movie with gautham menon stills, ajith news, ajith news in tamil, ajith new stills, ajith news image, ajith news 2014, ajith news today, ajith news in kumudam latest ajith news, thala ajith news, ajith next movie with shankar
![]()



