ஷூட்டிங்கில் திருட்டு வி.சி.டியில் படம் பார்க்கும் நடிகை

குரூப் புரொடக்ஷன் சார்பாக கதிரேசன் தயாரிப்பில் “பிட்சா” புகழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வெளிவரவிருக்கும் படம் “ஜிகர்தண்டா”
இப்படத்தில் சித்தார்த், லக்ஷ்மி மேனன், சிம்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு கேவிமிக் யு ஆரி.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் காத்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கதிரேசன், நாயகன் சித்தார்த், நாயகி லக்ஷ்மி மேனன் என ஜிகர்தண்டா பட குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

விழாவில் சித்தார்த் பேசியபோது, “நான் பிட்சா படத்தை பார்த்த பிறகு காத்திக் சுப்புராஜ் இயக்கம் அடுத்த படத்தை தயாரிக்க நினைத்தேன் ஆனால் என் அதிர்ஷ்டம் அவரில் அடுத்த படத்தில் கதையின் நாயகனாகவே நடித்துவிட்டேன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் அடுத்தடுத்து படங்களிலும் நான் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.

எங்கள் படகுழுவினரில் ஒரு செல்ல குட்டி பாப்பா இருக்கிறார். அது வேறு யாருமல்ல, லக்ஷ்மி மேனன் தான். ஷூட்டிங்கில் அவர் காட்சி அல்லாத நேரத்தில் சிறு குழந்தை போல் நடந்துகொள்வார். தனது மொபைல் போனில் டெம்பெல் ரன் விளையாடி கொண்டிருப்பார், தனியாக கேரவனில் உக்காந்து கொண்டு திருட்டு வி.சி.டியில் படம் பார்த்து கொண்டிருப்பார். ஆனால் கேமராவிற்கு முன்பு வந்தால் அவர் ஆளே மாறிவிடுவார். தனக்கு குடுத்த வேலையை மிகவும் சுலபமாக செய்து முடித்து விடுவார்.” என்றார்.

Share |
Previous Page Next Page HOME