அஜித் கூட இது தான் முதல்.......

ரஜினியை மனதில் வைத்து உருவாக்கிய கதையை தற்போது அஜித் நடிக்கவிருக்கிறார். கதையை முதலில் ரஜினியிடம் கூறிய பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் பின் ரஜினி சொன்ன ஆலோசனையின் பேரில் அதை அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார். ஆமாங்க, சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்த கதையில் என்னைவிட அஜித் நடித்தால் தான் மாஸாக இருக்கும் என்று கூறி அஜித்திடன் அனுப்பி வைத்திருக்கிறார். ஒன் லைன் ஸ்டோரி கேட்ட அஜித், விரைவில் முழுக்கதையையும் கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.

கெளதம் மேனம் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் கே.வி,ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தல. செப்டம்பரில் கெளதம் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட, வருட இறுதியில் கே.வி.ஆனந்த் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். ஹாரிஸ் அஜித்திற்கு இசையமைக்கும் முதலாவது படம் இதுதான்...!

Share |
Previous Page Next Page HOME