11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் நடிகை..... பிண்ணணியில் சிம்பு

ஜில்லா ரிலீசுக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்த பிறகு சிம்புதேவன் படத்துக்கு விஜய் வருகிறார். இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

விஜய் ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை முடிவு செய்துள்ளனர். இவர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஏற்கனவே தமிழன் படத்தில் விஜய்யும் பிரியங்கா சோப்ராவும் ஜோடியாக நடித்தனர். இப்படம் 2002–ல்  வெளியாகியிருந்தது.

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிம்புதேவன் படம் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.

Share |
Previous Page Next Page HOME