கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான எந்திரன் - 2 படத்தில் நடிக்கலாம் என்று செய்திகள் பரவிவருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோச்சடையான். இப்படம் வருகிற ஏப்ரல்
மாதத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படங்கள் குறித்து பலரும்
பலவிதமாகப் பேசிவருகின்றனர்.
வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்பொழுது தமிழ் சினிமாவெங்கும் மளமளவெனப் பெருகிவரும் இச்சூழ்நிலையில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரும் தனது எந்திரன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திற்குத் தயாராகியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் தற்பொழுது சியான் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தில் பிஸியாக இருந்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே
நிறைவடைந்துள்ளன. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் படுவேகமா நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்குப் பிறகு ஷங்கர் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கவுள்ளதாகக்
கூறப்படுகிறது.
கோச்சடையான் படத்தின் பணிகள் நிறைவடைந்திருப்பதால் சூப்பர் ஸ்டாரும் ஷங்கரின் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்குச்
சம்மதித்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும்.

![]()