காமெடியனை நான் தான் கலாய்க்க வேண்டும், என்னை காமெடியன் கலாய்க்க கூடாது: சிவா

சிவகார்த்திகேயன் தற்போது அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறாராம். அதாவது எனக்கு காமெடி + காதல் கலந்த கதை மட்டும் தான் வேண்டும். அதிலும் காமெடி அதிகம் காதல் கொஞ்சமாக இருக்க வேண்டும் என்று கரெக்‌ஷன் சொல்லி அனுப்பிவிடுகிறாராம். நடிகை ஹன்சிகாவுடன் இவர் சேர்ந்து நடித்த மான்கராத்தே ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இவர் இப்படியெல்லம் கண்டிஷன் போட்டா எப்புடிங்க என்று புலம்புகிறார்களாம் இவரிடம் கதை சொல்லப்போகும் ஆசாமிகள்.

சிவகார்த்திகேயனின் அடுத்த மூன்று படத்திலும் சூரி தான் காமெடியன் ரோல் பண்ணுகிறாராம். இது சிவாவின் வற்புறுத்தல் காரணமாகவே சூரி வலுக்கட்டாயமாக இப்படங்களில் இழுக்கப்பட்டுள்ளார். ஒரு சேன்ஜுக்காக சந்தானம் காமெடியனா போடலாமே என்றால் அதற்கும் ஒரு அற்புதமான பதிலை சொல்கிறார் சிவகார்த்திகேயன். அதாவது என் படத்தில் காமெடியனை நான் தான் கலாய்க்க வேண்டும் அதற்கு சூரி தான் கரெக்ட் சாய்ஸ் ஆனால் சந்தானம் காமெடியனாக நடித்தால் அவர் ஹிரோவை கலாய்ப்பதையே புழப்பாக வைத்திருப்பார். இதனால் எனக்கு செட் ஆகாது என்று கூறிவிட்டார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் சிவாவின் அடுத்த மூன்று படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அப்போ பாட்டு எல்லாமே சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் தான்...

Share |
Previous Page Next Page HOME