கடுப்பான சிம்பு, தடுக்கமுடியாத காரணம் சொல்லி தப்பித்த ஹன்சிகா?

‘மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளரான ஜேம்ஸ், சிம்பு நடித்த ‘வானம்’ படத்தின் இணை தயாரிப்பாளர். இந்த நட்பில் சிம்பு கேட்ட ஒரு உதவியை ஜேம்ஸ் செய்ய மறுத்துவிட, கோடம் பாக்கத்தில் ஒரே கோப சப்தம். சப்தம் கொடுப்பவர் சிம்புவேதான். ‘மான் கராத்தே’ படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஊரறிந்த செய்தி.

இதில் ஒப்பந்த மாகும் விஷயத்தை ஹன்சிகா சிம்புவுக்கு சொல்லவே இல்லை யாம். கால்ஷீட் கொடுக்கப்பட்ட பிறகு தான் அவருக்கு விஷயமே தெரியுமாம். இப்படத்திலிருந்து விலகுமாறு சிம்பு வற்புறுத்த, “ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டேனே,” என்று கூறியே தப்பித் தார் ஹன்சிகா.

இதெல்லாம் முன் கதை சுருக்கம். நடுநடுவே சிவகார்த்திகேய னின் பெயரை சொல்லாமலே பேட்டிகளில் அவரைச் சீண்டி வந்த சிம்பு, கடந்த சில தினங்களுக்கு முன் ரொம்பவே கடுப்பாகி விட்டா ராம்.

Share |
Previous Page Next Page HOME