அந்த நடிகர் மீது கோபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்….!

துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் உருவாக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்தது. அப்போது படமாக்கப்பட்ட சேசிங் காட்சியில் வங்காள வில்லன் நடிகர் தோடா ராய் சவுத்ரி நடித்தார்.
ஷூட்டிங் முடிந்து சென்ற அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மீடியாவிடம் முருகதாஸ் பட கதையை அவர் லீக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வில்லன் நடிகர் தோடாவின் வேடம் படத்தில் குறைக்கப்பட்டது. அவர் மெயின் வில்லன் கிடையாது என்று முருகதாஸ் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தோடா, படத்தின் மெயின் வில்லன் கிடையாது. இன்னும் வேடத்துக்கு தகுதியான வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருக்கிறோம். கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தபோது சேசிங் காட்சிக்காக சிலர் தேவைப்பட்டனர். அப்படி தேர்வானவர்தான் தோடா என்றார். சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதையை மட்டுமின்றி ஒன்லைனை கூட ரகசியமாக பாதுகாக்கின்றனர். வேறு யாராவது காப்பி அடித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME