மோகன்லால் மீது வருத்தத்தில் இருக்கும் விஜய்: காரணம் விக்ரம்?

கடந்த வருடம் கேரளா முழுவதும் வெளியான மோகன்லால் நடித்த Drishyam படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. வித்தியாசமான கதை, நேர்த்தியான திரைக்கதை, மோகன்லாலில் பக்குவமான நடிப்பு ஆகியவை படத்திற்கு ப்ளஸ் பாயிண்டுகளாக அமைய கேரளா முழுவதும் படம் சக்கைபோட்டு போட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை பார்த்த விஜய், மோகன்லாலுடன் சமீபத்தில் இந்த படத்தை பார்த்தார். ஜில்லா படத்தில் இருவரும் நடிப்பதால் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். எனவே Drishyam படதை தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாக மோகன்லாலிடம் விஜய் கூறியிருக்கிறார்.

மோகன்லாலும், தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி விஜய்க்கு உதவுவதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது திடீரென அந்த படத்தின் ரீமேக்கில் விக்ரம் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விஜய் அதிர்ச்சியடைந்தார். மோகன்லாலும் இதுவரை விஜய்யிடம் எவ்வித பதிலும் சொல்லாததால் மோகன்லால் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.

Share |
Previous Page Next Page HOME