அஜீத் பாலிசிக்கு நாங்களும் பலிகாடாகனுமா? தமன்னா

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'முரட்டுக்காளை' படத்திற்கு ரைட்ஸ் வாங்காமல் முலாம் பூசி விவேகமில்லாமல் 'வீரம்' ஆக்கியிருப்பதாக கிசுகிசுக்கள் ஒரு பக்கம்...! அதெல்லாம் ஒன்றுமே இல்லை... 'முரட்டுக்காளை'யை நான் பார்தததே இல்லை.... எனும் இயக்குநர் சிவாவின் மறுப்பு ஒரு பக்கம்... தயாரிப்பாளர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் ஒருவழியாக வாங்கிவிட்டாலும், வினியோகஸ்தர்களிடமிருந்து சில ஏரியாக்களில் தியேட்டர்க்காரர்கள் இன்னமும் வாங்காத வருத்தம் மற்றொரு பக்கம்... என ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை சந்தித்து வரும் 'வீரம்' பற்றி அதில் நாயகி தமன்னா மற்றும் அல்டிமேட் அஜீத்தின் தம்பிகளாக நடித்திருக்கும் வளரும் இளம் நடிகர்கள் விதார்த், பாலா உள்ளிட்டவர்களுக்கு ஒரு வருத்தம் இருக்காம்.

 
அதாகப்பட்டது, வீரத்திற்கு விளம்பரமும், வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் சமீபத்தில் ஆரம்பம் படத்திற்கு அவாய்ட் பண்ணியது மாதிரி செய்யாமல், பத்திரிகை மற்றும் மீடியாக்களை அவசர அவசரமாக அழைத்து ஆஹா, ஓஹோ என அல்வா கொடுத்தது 'வீரம்' படக்குழு! பட விழாக்களில் பங்கேற்பதில்லை... எனும் கொள்கை உடைய அஜீத், தான் நடித்த புரோமஷன்களிலும் பங்கேற்காமல் எஸ்கேப் ஆவது தெரிந்தது தான். அதனால் அவர், தன் மகளின் பிறந்தநாளை நடுக்கடலில் பெரும் சொகுசு கப்பலில் கொண்டாட எங்கோ அயல்நாட்டிற்கு பறந்த சமயம் இந்த வீரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு அவசரஅவசரமாக அழைப்பு விடுத்து மீடியாவை மீட் செய்தது வீரம் படக்குழு.

அதிலும் அஜீத் கலந்து கொள்ளாத காரணத்தால் அவர் உடன் நடித்த தமன்னா, தம்பிகளாக நடித்த விதார்த், 'அன்பு' பாலா உள்ளிட்டவர்களையும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு, 'வீரம்' படத்தின் இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், எடிட்டர் காசி விஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் மிலன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, தயாரிப்பாளர் வெங்கட்ராம் ரெட்டி உள்ளிட்டவர்கள் மட்டும் மீடியாக்களை சந்தித்தனர். இதில் தான் இளம் நடிகர்கள் விதார்த், அன்பு பாலா மற்றும் தமன்னா உள்ளிட்டவர்களுக்கு வருத்தமாம்.

மீடியாக்களின் முன் வருவதில்லை... என்பது அஜீத் பாலிசி, அதற்கு நாங்களும் பலிகடாவா? அவர் வராததால் எங்களையும் அழைக்காதது எந்த விதத்தில் நியாயம்?! எனக் வருத்தத்துடன் கேட்டு, நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் தமன்னா, விதார்த், பாலா உள்ளிட்டவர்கள்! நியாயமான கேள்விதான்.

ஒரு படத்தின் புரமோஷனுக்கு வெறும் டெக்னீஷியன்களும், தயாரிப்பாளரும் போதுமா? என்று அஜீத் தரப்புக்கே வெளிச்சம்!!

Share |
Previous Page Next Page HOME