என்னது ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தலைவர் விஜய்யா?

கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஆட்சியை கைப்பிடித்து சாதனை புரிந்த கட்சி ஆம் ஆத்மி கட்சி ஒன்றுதான். நாடு முழுவதும் இந்த கட்சியின் செல்வாக்கை பற்றிய பேச்சுதான் இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கிளை துவங்க உள்ளதாகவும், அதற்கு நடிகர் விஜய் தலைமை ஏற்கப்போவதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசு கிளம்பியுள்ளது.

அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விஜய்க்கு தலைவலிதான். சுறா, வேட்டைக்காரன், காவலன் போன்ற படங்களை திமுக ஆட்சியில் படாதபாடு படுத்தினார்கள் என்பது தமிழகமே அறியும். அதுபோலவே அதிமுக ஆட்சியில் "தலைவா" படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் ஆளும்கட்சி கொடுத்த பிரஷரால் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. முதல்வரை நேரில் பார்க்க அனுமதிகூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தனக்கு ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பின்புலம் வேண்டுமென யோசித்து கொண்டே இருந்தார் விஜய். சில மாதங்களுக்கு முன்புகூட திருவனந்தபுரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக அழைத்து புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்துள்ளதாக வதந்தி கிளம்பியது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆரம்பிக்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் கிளைக்கு ஒரு பிரபலமானவரை தமிழகத்தலைவராக நியமிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கவேண்டுமானால் தமிழக பிரபலம் ஒருவரை கட்சியின் தலைவராக நியமனம் செய்யவேண்டும் என யோசித்தார். முதலில் உதயகுமாரன் பரிசீலிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்பு குறித்த ஆதாரங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் கைக்கு கிடைத்ததால் அவரை ரிஜக்ட்ச் செய்த அரவிந்த் பார்வையில் இப்போது புதியதாக தென்பட்டிருப்பவர் விஜய்,. விஜய்யிடம் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொலைபேசியில் ஆலோசனை செய்துள்ளனர். விரைவில் விஜய் டெல்லி சென்று அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்க உள்ளார். ஏற்கனவே விஜய், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தவர் என்பது நாம் அறிந்ததே....

Share |
Previous Page Next Page HOME