ஜப்பானில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஹன்சிகாவுக்குத்தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றதாம். 'தீயா வேலை செய்யணும் குமார்" படப்பிடிப்பின்போது ஹன்சிகா ஜப்பானுக்கு சென்றபோது ஒரு பெண் ஹன்சிகாவை அணுகி அவர் நடித்த படங்கள் குறித்து கேட்டறிந்து அவற்றின் டிவிடிகளை வாங்கிச்சென்றாராம். ஜப்பான் அமைச்சர் ஒருவரே ஹன்சிகாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று விருந்தளித்த சம்பவம் நடந்ததாக அந்த நேரத்தில் படக்குழுவினர் தெரிவித்தனர். ஜப்பானில் ரஜினிக்கு அடுத்த இவருக்கு செல்வாக்கு அதிகம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனால் ரஜினியை வைத்து அடுத்த படம் எடுக்க விரும்பிய ஒரு தயாரிப்பாளர் ஹன்சிகாவை அணுகி ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் இருப்பதாக தெரிகிறது. ரஜினியின் அனைத்து படங்களும் ஜப்பானில் நல்ல வியாபாரம் ஆகும். இந்நிலையில் அந்த படத்தில் ஹன்சிகாவும் சேர்ந்தால் படம் நல்ல தொகைக்கு வியாபாரம் ஆகும் என்று கணக்கு போட்டிருக்கின்றாராம்.
ஏற்கனவே ஹன்சிகா தற்போது அரண்மனை, மான் கராத்தே ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக தமிழ்ப்படங்கள் அனைத்தும் சிங்கப்பூர், மலேசியாவின் உடனே ரிலீஸ் ஆகும். இந்த இரண்டு படங்களை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

![]()