ஆனால் இந்த இரண்டு டைட்டில்களும் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 'மாற்றான்' படத்தோல்வியின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத சூர்யா 'மன்னார்' டைட்டிலை கேட்டதும் டென்ஷனாகிவிட்டாராம். அந்த டைட்டிலை ரிஜக்ட் செய்த சூர்யா, இந்த பாய், கேர்ள் டைட்டில் எல்லாம் தமிழுக்கு செட் ஆகாது. அதனால் வேறு டைட்டிலை யோசிக்குமாறு லிங்குசாமியிடம் தெரிவித்துவிட்டாராம். உதவி இயக்குனரும், தானும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த டைட்டிலை சூர்யா ஒரே நிமிடத்தில் ஒதுக்கி தள்ளியதால் இயக்குனர் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு பாடல்காட்சியை மும்பையில் படமாக்கிவிட்டு திரும்பியுள்ளனர் படக்குழுவினர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் மிக அருமையாக வந்திருக்கிறதாம் அந்த பாடல். இந்த பாடல் காட்சியில் சந்தோஷ் சிவன் வித்தியாசமான ஒளிப்பதிவு முறை ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றாராம். அது என்ன என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நதியா நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல். நதியா ஏற்கனவே சூர்யாவின் அப்பா சிவகுமாருக்கு ஜோடியாக உனக்காகவே வாழ்கிறேன் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.