சென்னை::கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில்தான் ஆர்வம் காட்டுகிறார். ஆர்யா, விஷாலுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்கிற செய்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இது எதுவும் உண்மை இல்லை என்று ஸ்ருதிஹாசன் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது திட்டமிட்டு செய்ததில்லை. தமிழ் படத்தில் நான் நடித்தால் அந்தப் படம் பேமிலியோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரி கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கணும், அல்லது நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கிற படமா இருக்கணும்.
இப்போதைக்கு மூன்று இந்திப் படங்கள் கையில இருக்கு. இதற்கிடையில் நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா தமிழ்லேயும் நடிப்பேன். மற்றபடி நான் தமிழ் படத்துல நடிக்கிறேன்னும், நடிக்க மறுக்குறேன்னும் வர்ற செய்தியெல்லாம். உங்களை மாதிரி எனக்கும் ஒரு செய்திதான். படிச்சிட்டு சிரிச்சுக்குவேன் அவ்வளவுதான்" என்கிறார்.