கார்த்தியால் நட்டாற்றில் நிற்கும் ராஜேஷ்க்கு கைகொடுப்பாரா அஜித்?

மூன்று அதிரடி ஹிட்டுக்குப் பிறகு அதே அளவுக்கு பெரிய ப்ளாப்பை தந்தார் இயக்குனர் ராஜேஷ்.

அழகுராஜாவின் தோல்வி குறித்து பேசுகிறவர்கள் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மூன்று ஹிட்களை தந்தவர் என்பது குறித்து யோசிக்க தயாராக இல்லை.

ஆர்யாவை வைத்து அடுத்தப் படத்தை ராஜேஷ் இயக்கப் போவதாகதான் முதலில் கூறப்பட்டது. இப்போது வேறு ஒரு செய்தியும் அடிபடுகிறது. அதாவது அஜித்தை வைத்து விரைவில் ஒரு படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.

காதலும், டாஸ்மாக் பின்னணியில் அமைந்த காமெடியும், சந்தானமுமே ராஜேஷின் பலம். இந்த... முக்கூட்டணியுடன் அஜித்தின் இமேஜ் பொருந்திப் போகுமா? எப்படி இந்த காம்பினேஷன் சாத்தியம் என ஏகப்பட்ட கேள்விகள். சூர்யாவால் கைவிடப்பட்டதால்தான் உடனே கௌதமை அழைத்து அவருக்கு தனது அடுத்தப்பட வாய்ப்பை தந்தார் அஜித்.

கார்த்தியால் நட்டாற்றில் நிற்கிறார் ராஜேஷ். கைகொடுக்க அஜித் முன்வந்தால் அதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Share |
Previous Page Next Page HOME