சசிகுமார் இயக்கத்தில் விஜய்

இயக்குநர் மற்றும் நடிகரான சசிக்குமார் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார். கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்த சாக்ரட்டீஸ் இயக்கும் பிரம்மண் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார்.

அதையடுத்து பாலா இயக்கவிருக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் 2015ல் விஜயை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கவிருக்கிறார். கதையும் விஜய்க்கு பிடித்துவிட்டதால் இந்த வருடம் நடிப்பில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருப்பதாக இயக்குநர் சசிகுமார் வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின்றன.

Share |
Previous Page Next Page HOME