கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் தேதியை சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்கார் நாயகனின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு சோனி மியூசிக் நிறுவனம் ஒரு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. அதுதான் கோச்சைடையான் பாடல் வெளியீட்டு விழாவின் தேதி. வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கோச்சடையான் படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்படும் என்றும் இந்த விழாவில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வர உள்ளது. முழுக்க முழுக்க மோஷன் கேப்ட்சர் போட்டோ டெக்னாலஜியில் உருவான இப்படத்தின் தொழில்நுட்பம் தமிழ்திரையுலகிற்கு ஒரு புதிய முயற்சி. கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார்.

![]()