கார்த்திக், பிரபு, நிரோஷா, அமலா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கில் கார்த்திக் மகன் கெளதம் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பழைய ஹிட்டான படங்களை எடுப்பதில் பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு முன்னணி தயாரிப்பாளர் அக்னி நட்சத்திரம் படத்தை ரீமேக் செய்ய விரும்பி, அதில் கார்த்திக் மகன், கெளதம், மற்றும் பிரபு மகன் விக்ரம் பிரபு ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்தார். விக்ரம் பிரபு இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் கெளதம் தனது தந்தை நடித்த கேரக்டர் டம்மி என்பதால் அதில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.
ஆனால் சுந்தர் சி, தற்போது உள்ளத்தை அள்ளித்தா படத்தை ரீமேக் செய்யும் ஆலோசனையில் உள்ளார். இதில் நடிக்க கெளதம் ஆர்வம் காட்டி வருகிறாராம். தனது தந்தை நடித்த படத்திலேயே உள்ளத்தை அள்ளித்தா படம்தான் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும், எனவே அந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்கத்தயார் என்றும் கூறியுள்ளார். அந்த படத்தில் ரம்பா கேரகரில் ஹன்சிகா நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கருத்து கூறியுள்ளார்.

![]()