அக்னி நட்சத்திரம் ரீமேக் அதே வாரிசுகள் நடிக்கிறார்களா?

தெலுங்கு ஆலா மொதலைந்தி படம், தமிழில் என்னமோ ஏதோ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கவுதம் கார்த்திக், ரகுல் பிரீத்தி சிங், நிகிஷா படேல், பிரபு, அழகம்பெருமாள் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் தயாரிக்கின்றனர். ரவி தியாகராஜன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் கவுதம் கார்த்திக் கூறியதாவது:இதில் நடிப்பதற்கு முன், என் தந்தை கார்த்திக், தெலுங்கு படத்தை பார்த்தார். கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொன்னதை அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இது தெலுங்கு ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காதல், காமெடியுடன் உருவாகி உள்ள படம். இதில் பிரபுவுடன் நடித்தது புது அனுபவம். சினிமா பற்றியும், உடல் நலம் பாதுகாப்பது பற்றியும் நிறைய டிப்ஸ் கொடுத்தார். இதில் 2 ஹீரோயின்களுடன் நடித்துள்ளேன். இருவரிடமும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஷூட்டிங் முடிந்துவிட்டது. இம்மாத இறுதியில் படம் ரிலீசாகும்.அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கில் நானும், விக்ரம் பிரபுவும் நடிப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அப்பா நடித்த படங்களில், உள்ளத்தை அள்ளித்தா ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ரவி தியாகராஜன், கோபி ஜெகதீஸ்வரன், இமான், மதன் கார்க்கி உடனிருந்தனர்.

Share |
Previous Page Next Page HOME