வரும் ஜனவரி 10ஆம் தேதி அஜீத்தின் வீரம் வெளியாகவுள்ள நிலையில் அஜீத் தற்போது குடும்பத்தினர்களுடன் வெளிநாட்டி ஓய்வு எடுத்து வருகிறார். தனது மகளில் 6வது பிறந்தநாளை அவர் வெகுவிமரிசையாக வெளிநாட்டில் கொண்டாடினார்.
வரும் 9ஆம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ள வீரம் படத்தின் ரிசல்ட்டை உன்னிப்பாக கவனிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அஜீத் குறித்த ஒரு பரபரப்பான தகவல் வெளிவந்துள்ளது.
அஜீத் வெளிநாட்டு பயணம் செய்வதற்கு முந்தைய நாள் அவரை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் அவருடைய வீட்டுக்கு சென்று சந்தித்தாராம். குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் அஜீத் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு அஜீத், தற்போது கெளதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால் அந்த படத்தில் மட்டுமே தனது கவனம் இருக்கும் என்றும் அதற்கு அடுத்த படம் என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், எதுவாக இருந்தாலும், தன்னுடைய வெளிநாட்டு பயணம் முடிந்து நாடு திரும்பியவுடன் பேசிக்கொள்ளலாம் என்று மழுப்பலாக பதில் கூறி அவர்களை அனுப்பிவிட்டாராம்.
அஜீத்துக்கு ஏற்கனவே திமுக ஆட்சியின்போது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்ததால், திமுகவில் முக்கிய தலைவராக வளர்ந்து வரும் குஷ்புவுடன் தொழில்ரீதியான உறவு வைத்துக்கொள்ள அஜீத் விரும்பவில்லை என அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

![]()