ஜீவாவை பாராட்டிய விஜய்!

ஒரு விழாவில் பேசிய விஜய், என்னை விட தனுஷ் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அவரது நடிப்பைப்பார்த்து ரொம்ப வியந்திருக்கிறேன் என்று தனுஷ் முன்னிலையிலேயே அவரை பாராட்டினார் விஜய். இந்த பேச்சை எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தனுஷ், சந்தோசத்தில் திக்கித்திணறிப்போனார். அதனால், வீட்டுக்கு சென்றதும், விஜய்க்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்த தனுஷ், இந்த பாராட்டே எனக்கு விருது கிடைத்தது போல் உள்ளது. இதுபோல் மற்ற நடிகர்களை பாராட்டுவதற்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேண்டும் என்று தெரிவித்தவர், விஜய்யை விட நான் பெரிய நடிகன் ஒன்றுமில்லை என்றும் ஸ்டேட்டஸ் வெளியிட்டார்.

இந்தநிலையில், தற்போது ஜில்லா படத்தின் ஒரு பாடல் காட்சியில் தன்னுடன் இணைந்து நடனமாடியுள்ள ஜீவாவையும் புகழ்ந்துள்ளார் விஜய். என்னைவிட ஜீவா நன்றாக நடனமாடியிருக்கிறார். அதனால் பாடல் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால், உற்சாகத்தில் இருக்கும் ஜீவா, விஜய்யே பெரிய டான்சர். அவர் என்னை பாராட்டுவது ரொம்ப பெருமையாக உள்ளது. இதேபோல் சக கலைஞர்களை நடிகர்கள் பாராட்டுவது ஒரு நல்ல ஆரோக்கியத்தின் தொடக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share |
Previous Page Next Page HOME