ஹன்சிகாவை உசுப்பேற்றிய சிம்ரன்!

சிவாஜிகணேசன்-சரோஜாதேவி ஆகியோருடன் விஜய் நடித்த படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில்தான் இடுப்பழகி சிம்ரன் அறிமுகமானார். அதையடுத்து ஓரிரு படங்களிலேயே கோலிவுட்டின் ஹாட்பீட் ஆகி விட்டார். ஒரு கட்டத்தில் கிளாமர் நாயகி என்பதில் இருந்து விடுபட்டு பர்பாமென்ஸ் நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டார் சிம்ரன்.

இருப்பினும் திருமணத்துக்குபிறகு அவராலும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. எல்லா கதாநாயகிகளையும்போலவே சிம்ரனையும் வெளியேற்றியது கோலிவுட். ஆனபோதும்., சின்னத்திரைகளில் தன்ன தக்க வைத்துக்கொண்டு வரும் சிம்ரன், கணவர் மற்றும் 2 மகன்களுடன் சென்னையிலேயே தங்கியிருந்து சின்னத்திரை வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை தமிழ் சினிமாவில் எனது இடம் இன்னும் காலியாகவே உள்ளது. அதை நீதான் நிரப்ப வேண்டும் என்று ஹன்சிகாவிடம் சொன்னார் சிம்ரன். அதையடுத்து, கிளாமர் வேடங்களை தவிர்த்து பர்பாமென்ஸ் வேடங்களில் கவனத்தை திருப்பினார் ஹன்சிகா.

மேலும், சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்று சிம்ரனிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, துளியும் யோசிக்காமல் ஹன்சிகா என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் கிளாமர் பொம்மையாக வலம் வந்த அவர், இப்போது நன்றாக நடிக்கவும் செய்கிறார். அழகாக இருப்பதோடு, நன்றாக நடனமும் ஆடுகிறார். அதனால், தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய தற்போதைய நடிகைகளில் முதல் இடத்தை ஹன்சிகாவே பிடிப்பார் என்று கூறியுள்ளார் சிம்ரன்.

சிம்ரனின் இந்த பாராட்டைக் கேட்டதில் இருந்து, இனி துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவரும் ஹன்சிகா, டைரக்டர்கள் கதை சொல்லும்போது, என் திறமைக்கு இதெல்லாம் பத்தாது, உங்ககிட்டயிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என்று தனது கேரக்டரை வலுப்படுத்த சொல்கிறாராம் ஹன்சிகா.இதனால் அவருக்கு தீனி போடக்கூடிய கேரக்டர்களை சில இயக்குனர்கள் அவசரகதியில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Share |
Previous Page Next Page HOME